‘எந்திரன்’ வசூலை மிஞ்சும் ‘ஐ’ வசூல்…

i-and-endhiran‘ஐ’ திரைப்படத்தின் வசூல் பொங்கல் விடுமுறை முடிந்தும் அதே அளவிற்குத்தான் உள்ளது. நேற்று முதல்  படத்தின் வசூல் குறையும் என்றார்கள், ஆனாலும் நேற்றும் பல திரையரங்குகள் பகல் காட்சிகள் கூட ஹவுஸ் ஃபுல்லாக இருந்ததை பார்க்க முடிந்தது.

சில திரையரங்குகளில் மட்டும் 80 முதல் 90 சதவீத அளவிற்கு நிறைந்திருந்தன. நேற்று பகலில் நாமும் சென்னையில் உள்ள ‘காசி, உதயம், கமலா’ ஆகிய திரையரங்குகளுக்கு நேரடிய விஜயம் செய்தோம். அங்கு காலை, மதியம் காட்சிகளில் விடுமுறை தினத்தைப் போன்றே கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.

ஐந்து நாட்களிலேயே ‘ஐ’ திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் 170 கோடியைத்  தொட்டுவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் விவரம் கீழே,

தமிழ்நாடு – 50 கோடி

ஆந்திரா, தெலுங்கானா – 40 கோடி

கேரளா – 13 கோடி

கர்நாடகா – 10 கோடி

இந்தியாவின் பிற மாநிலங்கள் – 4 கோடி

ஹிந்தி மொழியில் வசூல் – 12 கோடி

அமெரிக்கா – 10 கோடி

ஐரோப்பிய நாடுகள் – 5 கோடி

உலகின் பிற பகுதிகள் – 25 கோடி

மொத்தம் – 169 கோடி , 

ரூபாய் அளவிற்கு வசூல் இருந்திருக்கும் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 169 கோடி ரூபாயில் இந்திய வசூல் மட்டும் 129 கோடி ரூபாய் ஆகும்.

இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களிலேயே ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம்தான் அதிக வசூல் செய்த படமாக இருந்துத வந்தது. அந்த சாதனையை ‘ஐ’ விரைவில் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

‘எந்திரன்’ திரைப்படத்தின் திரையரங்க வசூல், வெளிநாட்டு வசூல், சாட்டிலைட் உரிமை ஆகிய அனைத்தும் சேர்த்து 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக 2012ம் ஆண்டு வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

அந்த விதத்தில் பார்க்கும் போது, ‘ஐ’ திரைப்படம் திரையரங்க வசூல், வெளிநாட்டு வசூல் ஆகியவற்றில் மட்டும் இதுவரை 169 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. படத்தின் சாட்டிலைட் உரிமை 30 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதையும் சேர்த்துக் கணக்கிட்டால் ‘எந்திரன்’ வசூல் தொகையான 200 கோடியை ‘ஐ’ படத்தின் வசூல் தொட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இது வெறும் 6 நாள் கணக்கு மட்டும்தான், ‘எந்திரன்’ படத்தின் மொத்த வசூல்தான் 200 கோடி, ஆக ‘ஐ’ திரைப்படம் இன்னும் சில வாரங்கள் ஓடும் போது அதன் கணக்கு ‘எந்திரன்’ படத்தின் வசூலையும் முறியடித்த ஒன்றாக இருக்கும்.

Read Previous

அஜித்தின் ‘Sorry – Thanks’ தத்துவம்…

Read Next

ரஜினிகாந்த் அரசியலில் நுழைவாரா…? திடீர் பரபரப்பு…