80களில் வெற்றிகரமாக வலம் வந்த நடிகர்கள், நடிகைகள் சந்தித்து ‘கெட் டு கெதர்’ கொண்டாடியதைப் போல 90களின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடத்தியிருக்கிறார்.
இந்த சந்திப்பில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், சுந்தர் .சி, வெங்கட்பிரபு, பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் விஜய், சூர்யா, ஜெயராம், அரவிந்த்சாமி, நடிகைகள் சிம்ரன், ரோஜா, மீனா, ஜோதிகா, சங்கீதா, மகேஸ்வரி, சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
80களின் தென்னிந்திய நட்சத்திரங்கள் கடந்த சில வருடங்களாக தனிப்பட்ட முறையில் சந்தித்து வந்ததனர். ஆனால், இந்த ஆண்டு அதை ஒரு விழாவாக நடத்தி, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள். ஆனால், அந்த விழாவில் இந்த ஆண்டு, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
தற்போது நடந்துள்ள 90களின் சந்திப்பு நிகழ்ச்சி இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

