‘இறைவி’யில் வித்தியாச கூட்டணி…

iraivi-actors-news“பீட்சா, ஜிகர்தண்டா” ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் படம் ‘இறைவி’.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களிலும், கருணாகரன் துணை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

படத்தில் நடிக்கும் நடிகைகள், மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் 11வது படமான  இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கேவ்மிக் யு ஆரி, ஒளிப்பதிவாளராகவும், விவேக் ஹர்ஷன் படத் தொகுப்பாளராகவும், விஜயமுருகன் கலை இயக்குனராகவும், விஷ்ணு கோவிந்த், ஸ்ரீஷங்கர் ஒலிப்பதிவாளர்களாகவும் பணியாற்ற உள்ளார்கள்.

ஏப்ரல் மாத கடைசியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

‘காக்கி சட்டை’ – த.நா.வில் 400 திரையரங்குகளில் ரிலீஸ்…

Read Next

90களின் திரையுலகினர் சந்திப்பு…