‘காக்கி சட்டை’ – த.நா.வில் 400 திரையரங்குகளில் ரிலீஸ்…

Kaaki Sattai - Gallery_00012தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் வெளியிடும் ‘காக்சி சட்டை’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மீண்டும் ஜோடி சேர, ‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் துரை செந்தில் குமார், சிவகார்த்திகேயன், அனிருத் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படம் வெளிவந்து சுமார் பத்து மாதங்களாகிவிட்டதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இன்னும் அதிகமாகக் காரணமாக அமைந்தது.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இதுவரை தயாரித்தும், வெளியிட்டும் உள்ள முந்தைய படங்களை விட இந்தப் படத்திற்கான வியாபார விசாரணைகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.

இப்போதே சுமார் 370 திரையரங்குகள் வரை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் மேலும் அது அதிகமாகி 400ஐத் தாண்ட வாய்ப்புள்ளதாக படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் தெரிவித்துள்ளார்.

‘காக்கி சட்டை’ படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read Previous

ரஜினி, கமலுடன் சண்டை போட்ட எஸ்.பி.முத்துராமன்

Read Next

‘இறைவி’யில் வித்தியாச கூட்டணி…