‘பென்சில்’ பள்ளிப் பருவ பரபரப்பு…

pencil movie newsஇயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராகப் பணி புரிந்த மணிநாகராஜ் இயக்கத்தில், கல்சன் மூவீஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பென்சில்’.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்யா இருவரும் பள்ளி மாணவ, மாணவியாக நடித்துள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் அவர்களது பள்ளிப் பருவத்தைப் பற்றி நினைவு கூறும் வகையில் இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

படம் மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக துணை நடிகர்களை பயன்படுத்தாமல், உண்மையான பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேருக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணி நாகராஜ்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டைப் பயிற்சி இயக்குனர் மற்றும் படத்தின் இயக்குனர் எவ்வளவு சொல்லியும் ஜி.வியும், ஸ்ரீதிவ்யாவும் டூப் இல்லாமல் அவர்களே அந்தக் காட்சியில் இரண்டு நாட்கள் நடித்துக் கொடுத்துள்ளார்கள்.

இரு தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

‘பென்சில்’ – டீசர்…

Read Previous

90களின் திரையுலகினர் சந்திப்பு…

Read Next

ஜீ தமிழ் டிவியில் ‘பிக் தமிழ் மெலடி விருதுகள் 2014’…

Most Popular