ஜீ தமிழ் டிவியில் ‘பிக் தமிழ் மெலடி விருதுகள் 2014’…

big fm tamil melody awardsமெல்லிசைப் பாடல்களை மட்டுமே தொடர்ந்து தனது அலைவரிசையில் ஒலிபரப்பி வருகிற ‘பிக் எஃப்எம்’, தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியோடு இணைந்து, ‘பிக் தமிழ் மெலடி விருதுகள் 2014’ வழங்கும் விழாவை வெற்றிகரமாக நடத்தியது.

இசைக்காக திரண்ட மக்கள் கடலில், பிரம்மாண்டமான ஒளித் திரளில் ஒட்டு மொத்த திரை இசைப் பிரபலங்களையும் ஒன்று திரட்டி வெற்றிகரமாக ஒரு மாபெரும் விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடித்தது.

ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, அனிருத், இமான், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பிரபல இசை அமைப்பாளர்களை மேடையேற்றியும் விருது வழங்கியும் இசை மகுடம் சேர்த்த அந்த நிகழ்ச்சியில் விஜயசேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம், சுனிதா சாரதி உள்ளிட்டோர் மேடையில் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய், ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஆதர்ச நாயகனாக கருதும் விஜி மேனுவல் என்கிற பிரபல பின்னணி இசைக் கலைஞரை மேடையேற்றி, ரஹ்மான் முன்னிலையில் அவரைச் றப்பித்த அந்த நிகழ்வு மெல்லிசை ரசிகர்கள் அத்தனை பேரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

இன்னும் ஏராளமான சுவாரசிய நிகழ்வுகளுடன் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் மொத்தத் தொகுப்பையும் வருகிற பிப்ரவரி 28ந் தேதி, சனிக் கிழமை, இரவு 7 மணிக்கு அபிமான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டு ரசிக்கலாம்.

Read Previous

‘பென்சில்’ பள்ளிப் பருவ பரபரப்பு…

Read Next

வைரமுத்துவின் ஆழமான வரிகளில் ‘தொப்பி’…