ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் ‘உத்தம வில்லன்’…

தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ க்ரீன். திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் பல நல்ல படங்களின் வினியோக உரிமையையும் வாங்கி வெளியிட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தை வாங்கி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டார்கள்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படத்தையும் இவர்கள்தான் வெளியிடுகிறார்கள்.

இப்போது கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்தையும் என்எஸ்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏரியாக்களில் வெளியிட உள்ளார்கள்.

மே 1ம் தேதி வெளியாகும் ‘உத்தம வில்லன், வை ராஜா வை’ ஆகிய இரு படங்களையும் ஸ்டுடியோ க்ரீன் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படத்தையும் வெளியிடுகிறார்கள்.

ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்று வருகிறது, அந்த வரிசையில் ‘உத்தம வில்லன்’ படமும் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது.

Read Previous

கின்னஸ் சாதனை புரிந்த ‘மானாட மயிலாட’…

Read Next

‘காஞ்சனா 2’ – பிரமோஷன் பாடல் இன்று படப்பிடிப்பு…

Most Popular