ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் வெளிவந்துள்ள ‘காஞ்சனா 2’ படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு வந்து படத்தைப் பார்த்து ரசிப்பதால் தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும், திரையுலகத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுவரை இந்தப் படம் சுமார் 40 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்லகிறார்கள்.
இப்போது இந்தப் படத்திற்காக புதிதாக ஒரு பிரமோஷன் பாடல் ஒன்றை ராகவா லாரன்ஸ் படமாக்கி வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ள “சில்லாட்ட..பில்லாட்ட…’ என்ற பாடலைத்தான் பிரமோஷன் பாடலாக மாற்றி, ராகவா லாரன்ஸ், டாப்ஸீ, நித்யா மேனன் ஆகியோர் நடனமாட இன்று இப்பாடலைப் படமாக்கி வருகிறார்.
இப்பாடலை விரைவில் படத்தின் பிரமோஷனுக்காக பயன்படுத்தப்பட உள்ளார்கள்.