நேற்று நிஜ ஜோடி…இன்று நிழல் ஜோடி

த்ரிஷாவையும் பிரிவையும் தற்போதைக்கு பிரிக்க முடியாது போலிருக்கிறது. வருண்மணியனுடன் நடந்த நிச்சயதார்த்தம் கடைசியில் திருமணத்திற்கு முன்பாகவே பிரிவில் முடிந்தது. நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவு ஏற்பட்ட நிலையில் நிழல் வாழ்விலும் ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த காதல் படங்களிலேயே சிறந்த பத்து காதல் படங்கள், சிறந்த பத்து காதல் ஜோடிகள் என இன்றைய தலைமுறையினருரிடம் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தையும், அந்தப் படத்தின் காதல் ஜோடியான சிம்பு, த்ரிஷாவையும் தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த காவியக் காதல் ஜோடி மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அந்த ஜோடி பிரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

திரைப்படம் ஆரம்பமாவதற்கு முன்பே இந்த ஜோடியும் பிரிந்து விட்டதற்குக் காரணமாக இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனால், தன்னுடைய கால்ஷீட்டை வீணாக்க வேண்டாமென முடிவெடுத்த த்ரிஷா, அதை கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் படத்திற்காக கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

நேற்றுதான் ‘இனிமே இப்படித்தான்‘ இசை விழாவில் ஹன்சிகா தன்னை விட்டுப் பிரிந்து போனதைப் பற்றிப் புலம்பிய சிம்பு, இப்போது த்ரிஷா புதிய படத்திலிருந்து பிரிந்து போனதைப் பற்றியும் பேசுவாரோ…

திருமணத்திலும் ஒரு பிரிவு, திரைப்படத்திலும் ஒரு பிரிவு என த்ரிஷாவும், சிம்புவும் இதில் கூட ஒரு ஒற்றுமையுடன் இருப்பதை திரையுலகத்தில் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.

Read Previous

இனிமே இப்படித்தான்…சொன்னதைச் செய்த சந்தானம்…

Read Next

ஜெயா டிவி – மே 11 – 17 – திரைப்படங்கள்

Most Popular