இனிமே இப்படித்தான்…சொன்னதைச் செய்த சந்தானம்…

ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர், தம்பி ராமையா, ‘ஆடுகளம்’ நரேன் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இனிமே இப்படித்தான்’.

புதுமுக இயக்குனர் இரட்டையர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ஆகியோர் முருகானந்த் என்ற பெயரில் இந்தப் படம் மூலம் இயக்குனர்களாக அறிமுகம் ஆகிறார்கள்.

“சந்தானத்திற்கு எங்களிடம் இருந்த மூன்று கதைகளும் பிடித்திருந்தது. ஆனால், ‘இனிமே இப்படித்தான்’ கதையை தேர்வு செய்ததோடு இல்லாமல் அப்படத்தை எங்களையே இயக்கவும் சொன்னார். ஏழு வருடங்களுக்கு முன் அவரது படத்தில் எங்களை இயக்குனர்களாக அறிமுகப்படுத்துவேன் என்று கூறினார் சந்தானம். சொன்ன வார்த்தைக்கு ஒரு எழுத்து குறையாமல் அதை இப்போது இந்தப் படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார்,” என்கிறார் இரட்டையர்களில் ஒருவரான பிரேம் ஆனந்த்.

“இனிமே இப்படித்தான்’ சந்தானத்திற்கு கச்சிதமான ஒரு ரொமான்டிக் காமெடி படம். அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் திரியும் வேலையில்லா இளைஞனாக சந்தானம் நடித்திருக்கிறார். ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் என இரண்டு கதாநாயகிகள். மற்றும் தம்பி ராமையா, FEFSI விஜயன், பிரகதி, நரேன், VTV கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,” என்கிறார் இரட்டையர்களில் மற்றவரான முருகன்.

“விடிவி கணேஷ் சந்தானத்திற்கு காதல் ஆலோசகராக வருகிறார். இருவரும் இணைந்து வரும் காட்சிகளும் அவர்களது பன்ச் வசனங்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். சந்தானம் இப்படத்தில் ரிஸ்க்கான பல சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். ஏன் இந்த ரிஸ்க் என அவரிடம் கேட்டால் ‘இனிமே இப்படித்தான்’ என்று டைமிங்கில் சொல்லி விட்டுச் செல்கிறார். இது அவரது தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டியது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் சந்தானத்தின் பல்வேறு முயற்சிகள் இப்படத்தை சிறப்பான ஒன்றாய் மாற்றியுள்ளது. மொத்தத்தில் முழு நீள முழுதும் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக ‘இனிமே இப்படித்தான்’ வெளிவர உள்ளது என ஒற்றுமையாகச் சொல்கிறார்கள் இயக்குனர்கள் முருகானந்த்.

அறிமுக இயக்குனர்கள் முருகன், ஆனந்த் ஆகியோருக்கு ‘இனிமே இப்படித்தான்’, இனிமே ஆனந்தம்தான் என்பதாக அமையட்டும்.

Read Previous

மற்றவர்களுக்காக வாழப் போகிறேன் – சிம்பு உருக்கம்

Read Next

நேற்று நிஜ ஜோடி…இன்று நிழல் ஜோடி