சிறியவர் முதல் பெரியவர் வரை, ஆறிலிருந்து அறுபது வயதுக்கம் மேற்பட்டவர்களைக் கவர்ந்த நடிகர்களாக அன்று ரஜினிகாந்த் இருந்தார், இன்று விஜய் இருக்கிறார். இவர்களுக்கடுத்து அந்த இடம் சிவகார்த்திகேயனுக்குக் கிடைத்துள்ளதாகத்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
குழந்தைகளைக் கவர்வது என்பது சாதாரண விஷயமல்ல. அவர்களைக் கவர்ந்துவிட்டால் போதும் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துவிடலாம்.
ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் அவருடைய ஸ்டைலை வைத்தே ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார். விஜய், அவருக்கிருக்கும் நடனத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார்.
இப்போது சிவகார்த்திகேயன் குழந்தைகளைச் சிரிக்க வைத்து அந்த இடத்தை தனதாக்கிக் கொண்டு வருகிறார்.
விஜய் டிவியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய போதே சிவகார்த்திகேயனுக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் பேர் இருந்தார்கள். சினிமாவுக்கு வந்த பிறகும் அவர்களைக் கவரும் விதத்தில் படங்களில் நடித்து அந்த ரசிகர்களை தன் பக்கம் அப்படியே தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.
இது இப்படியே தொடர்ந்தால் அடுத்த வசூல் மன்னன் ஆக அவர் வந்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.