‘காக்க காக்க’ படத்தின் மூலம் திரைப்படத் படத் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஆண்டனி.
முதல் முறையாக ‘நைட் ஷோ’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மலையாளத்தில் 2012ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஷட்டர்’ என்ற படத்தின் ரீமேக்காக ‘நைட் ஷோ’ உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் சத்யராஜ், அனுமோள், கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து மகளின் கல்யாணத்திற்காக சொந்த ஊருக்கு வருகிறார் சத்யராஜ். அவருக்குச் சொந்தமான ஒரு கமர்ஷியல் காம்ப்ளக்சில் உள்ள ஒரு அறையில் நண்பர்களுடன் சேர்ந்து தினமும் குடிப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் குடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த அறையில் சத்யராஜுன் ஒரு விலை மாதுவை வைத்து ஒரு நண்பர் பூட்டி விடுகிறார். ஆனால், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் வேறு விதமாக நடக்கின்றன. அது என்ன என்பதுதான் பரபரப்பான இந்த த்ரில்லர் படத்தின் கதை.
படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்து விட்டது. இன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள். விரைவில் பட வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்க உள்ளார்கள்.
இயக்குனர் விஜய் அவருடைய தின்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.