தெலுங்குத் திரையுலகில் கடந்த சில வருடங்களாக நம்பர் 1 இடத்தில் வரும் சமந்தா, ‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது தமிழில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
தமிழில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் தற்போது நடித்து வருகிறார். விக்ரமுடன் ‘பத்து எண்ணுறதுக்குள்ளே’, சூர்யாவுடன் ‘24’, தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி 2, வட சென்னை’, மகேஷ் பாபு ஜோடியாக ‘பிரம்மோற்சவம்’, விஜய்யுடன் அட்லீ இயக்கும் புதிய படம் என 6 படங்களில் நடித்து வருகிறார்.
இதில் தனுஷுடன் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் படப்பிடிப்பு மட்டும் நிறைவடைந்து விட்டது.
தமிழில் தற்போது நயன்தாரா, ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், த்ரிஷா ஆகியோரை விட சமந்தாதான் அதிகப் படங்களில் நடித்து வருகிறார்.
2015ம் ஆண்டின் நம்பர் 1 ஹீரோயினாக சத்தமில்லாமல் முன்னேறி வருகிறார் சமந்தா.