VSOP – ஷுட்டிங் முடிந்தது…

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, பானு மற்றும் பலர் நடிக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஆரம்பமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது படத்தின் நட்சத்திரங்கள் உட்பட யூனிட்டினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

இமான் இசையமைக்கும் இந்தப் படம் ராஜேஷின் வழக்கமான நகைச்சுவைப் படங்களின் வரிசையில் இடம் பெறும் விதத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

‘அழகுராஜா’ படம் தோல்வியடைந்தாலும் நண்பன் ராஜேஷுக்கு தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் கை கொடுத்து தூக்கி விட்டுள்ளார் ஆர்யா.

ஆகஸ்ட் 15ம் தேதியன்று ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன்…

Read Next

Kamalhaasan’s Message About Helmet Awareness – Video

Most Popular