தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது நடிகை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஹலோ… நான் பேய் பேசுறேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.
அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கும் ‘ஆறாது சினம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், இரண்டு புதிய படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக உற்சாகமுடன் கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதே தனது கொள்கை’ என்கிறார்.