தமிழ்த் திரையுலகின் தற்போதைய வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிட வேண்டியவர் விஜய் சேதுபதி.
படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்து ‘சேதுபதி’ என்ற படத்தில் மீசையை முறுக்கி காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார்.
‘தெகிடி’ படத்திற்கு இசையமைத்த நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.