‘வேதாளம்’ இசை – அக்டோபர் 16ம் தேதி வெளியீடு

ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தின் இசை அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது.

அஜித் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை. தனுஷ், சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்த அனிருத் விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது அஜித் நடித்துள்ள படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

அக்டோபர் 16ம் தேதி அனிருத்தின் பிறந்தநாள் அன்று ‘வேதாளம்’ படத்தின் இசை வெளிவருவது அனிருத்திற்கும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

‘வேதாளம்’ படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.

Read Previous

மீசையை முறுக்கும் ‘சேதுபதி’

Read Next

Why do you want to watch Rudhramadevi ? – Promo Video

Most Popular