‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் பற்றி ராஜமௌலி நேற்று இரவு அவருடைய டிவிட்டர் கணக்கில் பதிவிட்டது செய்தியாளர்களையும், ரசிகர்களையும் நிறையவே குழப்பியது.
நேற்றைய செய்தி படிக்க – இங்கே ‘க்ளிக்’ செய்யவும்…
‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் இல்லை என்றே பலரும் செய்திகளை வெளியிட்டனர். ஆனால், இன்று காலை அது பற்றிய வருத்தத்தை வெளியிட்ட ராஜமௌலி ‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் இதுவரை அனுபவித்திருக்காத புது அனுபவமாக வெளிவரும் என்று மீண்டும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தெளிவான விவரத்தை அளிப்பதற்கு பதிலாக நானே குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் போலிருக்கிறது, மன்னிக்கவும்.
‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாக்கும் எண்ணம் உள்ளது. ஆனால், இதற்காக ‘பாகுபலி’யின் இரண்டு பாகங்களுக்காக எழுதிய கதையை மூன்றாம் பாகத்திலும் இழுக்க மாட்டோம். இந்தக் கதை இரண்டாம் பாகத்துடனேயே முடிந்துவிடும்.
‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் இதுவரை நீங்கள் அனுபவித்திருக்காத விதத்தில் அமையும். இப்போது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்,” என டிவீட்டியுள்ளார்.
அப்படியென்றால் ‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் வேறு ஒரு கதையுடன் உருவாக வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது.
Director S.S.Rajamouli’s tweets on Baahubali – 3
