மீண்டும் தனுஷ் – விஜய் சேதுபதி கூட்டணி

தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்த ‘நானும் ரௌடிதான்’ படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

தங்களது முதல் கூட்டணியிலேயே மாபெரும் வெற்றியைப் பெற்ற இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

இது பற்றி தனுஷ், “உன்டர்பார் பிலிம்ஸுக்காக ‘நம்ம ரவுடி’ விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதை மிக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்”, என அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய தயாரிப்பில் தான் மட்டும் நடிக்காமல் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ‘எதிர் நீச்சல், காக்கி சட்டை’ ஆகிய படங்களைத் தயாரித்த தனுஷ், அடுத்து விஜய்சேதுபதியு நடிக்கும் இரண்டாவது படத்தையும் தன் நிறுவனம் சார்பாக தயாரிக்க உள்ளார்.

படத்தை இயக்கப் போவது யார் போன்ற மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Read Previous

‘பாகுபலி’ – 3ம் பாகம் வெளிவரும் – ராஜமௌலி அறிவிப்பு

Read Next

ஜெயா டிவி – அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 – திரைப்படங்கள்