‘பாகுபலி’ 3ம் பாகம் வருமா ? – ராஜமௌலி விளக்கம்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து சுமார் 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

இன்று ‘பாகுபலி’யின் தெலுங்கு தற்போது மா – தெலுங்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

‘பாகுபலி’ படம் மூன்றாவது பாகமாகவும் தயாராக உள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி பரவியது. அது பற்றி ராஜமௌலி இன்று விளக்கம் கொடுத்துள்ளார்.

“பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் பற்றி வதந்தி பரவியுள்ளது. ஆனால், படம் இரண்டாம் பாகத்துடன் முடிவடைந்துவிடும். இழுப்பதெல்லாம் கிடையாது.

ஆனால், ‘பாகுபலி’யின் உலகம் ஏதாவது ஒரு வழியில் நீங்கள் இதுவரை அனுபவித்திராத அளவிற்கு தொடர்ந்து கொண்டிருக்கும்.

சரியான சந்தர்ப்பத்தில் அது பற்றி வெளிப்படுத்துகிறேன். வதந்திகள் எதையும் நம்பாதீர்கள். எது வருமென்று எனக்கு மட்டுமே தெரியும்,” என டிவிட்டரில் தெரிவத்துள்ளார்.

Read Previous

5 மில்லியனைத் தாண்டிய ‘வேதாளம்’ டீசர்

Read Next

‘பாகுபலி’ – 3ம் பாகம் வெளிவரும் – ராஜமௌலி அறிவிப்பு