பா.ரஞ்சித் இயக்கத்தல் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒரு சில பொது இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், படப்பிடிப்புக் காட்சிகளை புகைப்படம் எடுக்கும் பலர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பல முக்கியமான காட்சிகளின் புகைப்படங்களும் இப்படி வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷும் கேட்டுக் கொண்டார்.
ஆனாலும், சிலர் இன்னமும் அப்படிப்பட்ட புகைப்படங்களையும், சில வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
ரசிகர்கள் அதை நிறுவத்துவதாகத் தெரியவில்லை. அப்படிப் பகிர்வதை முற்றிலும் தடுப்பதற்கு வேறு வழி எதையாவது கையாண்டால்தான் உண்டு. அதை படக்குழுவினர் செய்வார்களா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.