அப்பா, மகள் நேரடிப் போட்டி

நடிகர் கமல்ஹாசன், அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ள உள்ளன.

கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள ‘தூங்காவனம்’ படமும், ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துள்ள ‘வேதாளம்’ படமும் நவபம்பர் 10ம் தேதியன்று தீபாவளி தினத்தில் வெளியாகின்றன. இதனால் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே முதல் முறையாக நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஸ்ருதிஹாசன் இதுவரை “7ம் அறிவு, 3, பூஜை, புலி” ஆகிய நான்கு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் நடித்துள்ள ஐந்தாவது படமாகவும், அஜித்துடன் நடிக்கும் முதல் படமாகவும் ‘வேதாளம்’ வெளிவர உள்ளது.

அப்பா, மகள் இடையேயான போட்டி ஒரு பக்கம் இருந்தாலும் கமல்ஹாசனும், அஜித்தும் பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே நாளில் மோத உள்ளார்கள். கடைசியாக 13 வருடங்களுக்கு முன்னர் கமல்ஹாசனும், அஜித்தும் ஒரே நாளில் போட்டியிட்டனர். 2002ம் ஆண்டு ஜனவரி 14, பொங்கல் தினத்தன்று கமல்ஹாசன் நடித்த ‘பம்மல் கே. சம்பந்தம்’ படமும், அஜித் நடித்த ‘ரெட்’ படமும் வெளியாகின. அதன் பிறகு இப்போதுதான் இவர்கள் மீண்டும் மோதுகிறார்கள்.

‘தூங்காவனம், வேதாளம்’ ஆகிய இரண்டு தீபாவளிப் படங்களில் எந்தப் படம் முந்தப் போகிறது என்பது இன்னம் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Read Previous

ரஜினிகாந்த் புகைப்படப் பகிர்வு நிற்குமா ?

Read Next

Sivaji statue – SC notice to TN govt.