அதர்வா கடுமையான உழைப்பாளி – ஈட்டி இயக்குனர் ரவி அரசு

டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள ‘ஈட்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ரவி அரசு.

முதல் படத்தை சராசரி படமாக இயக்காமல் விளையாட்டை மையப்படுத்திய ஒரு படமாக வித்தியாசமான படமாக ரசிகர்களுக்குத் தரவிருக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறனால் பாராட்டப்பட்ட இப்படத்தினைப் பற்றி இயக்குனர் ரவி அரசு கூறியதாவது,

‘ஈட்டி’ படத்தோட கதையை எழுதிய உடனே, இதை ஒரு இளம் நடிகர் பண்ணால்தான் சரியா இருக்கும்னு முடிவு பண்ணேன்.

இன்னைக்கு இருக்கிற இளம் நடிகர்கள்ல அதர்வா கடுமையான உழைப்பாளி, சிறப்பானவர். அதர்வா கிட்ட கதையை சொல்லணும்னு முடிவு பண்ணியிருந்தேன். மறுநாள் ‘பரதேசி’ படத்தோட அறிவிப்பு வெளியாச்சி. அப்புறம் ரெண்டு வருஷம் காத்திருந்தேன்.

‘பரதேசி’ ரிலீசுக்கு முன்னாடியே அதர்வா இந்தக் கதையை ஓகே பண்ணியிருந்தாரு. இந்தக் கதையைக் கேட்டதும் என்னோட இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டினாரு. படத்துல நிறைய டீடெய்லிங் பண்ணியிருக்கேன்னு சொன்னாரு.

இந்தப் படத்துல தனியா காமெடின்னு யாரையும் வைக்கலை, ஹீரோ, ஹீரோயினுக்குலதான் காமெடியே, அப்புறம் முருகதாஸ் இருக்கிறாரு, அவரோட காமெடி நல்லா இருக்கும்.

அதர்வா இந்தப் படத்துல ரொம்ப கடுமையா பயிற்சி எடுத்து நடிச்சிருக்காரு. தடை தாண்டும் ஓட்ட வீரரா நடிக்கிறதுக்காக சிறப்பான பயிற்சிகள் எடுத்த பிறகுதான் இந்தப் படத்துலயே நடிச்சாரு.

னக்கு விளையாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல விளையாட்டைப் பத்தின சிறப்பான படம் வரலை. அப்படிப்பட்ட படங்கள்ல ‘ஈட்டி’ படமும் சிறப்பான படமா இருக்கும்.

Read Previous

சற்குணம் தயாரிப்பில் புதிய படத்தில் நயன்தாரா

Read Next

ரஜினி முருகன் – மீண்டும் ஒரு ‘மியூசிக்கல் ஹிட்’

Most Popular