‘களவாணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சற்குணம் அவருடைய சொந்த நிறுவனமான சற்குணம் சினிமாஸ் மூலம் ‘மஞ்சப் பை’ படத்தைத் தயாரித்தார்.
அப்படத்தை அவருடைய உதவியாளர் ராகவன் இயக்கினார். விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சற்குணத்தின் உதவியாளரான தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். நகைச்சுவை கலந்த க்ரைம், த்ரில்லர் ஆக இப்படம் உருவாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான படமாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம்.
கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தின் மற்ற நடிக, நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.