‘வருத்தப்படாத வாலிர் சங்கம்’ படத்தின் வெற்றிக்கு இமானின் இசையில் அமைந்த சிறப்பான பாடல்களும் ஒரு காரணம்.
அதே போல அந்தப் படத்தின் கூட்டணியான ‘பொன்ராம், சிவகார்த்திகேயன், இமான்’ கூட்டணி ‘ரஜினி முருகன்’ படத்திலும் பாடல்களாலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் வெளியான போதே நிச்சயம் ஹிட் பாடல்கள் வரிசையில் சேர்ந்துவிடும் என்று சொல்லப்பட்டது. வெளியீடு நெருங்க நெருங்க அது இன்னும் அதிகரித்து வருகிறது.
“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…, உன் மேல ஒரு கண்ணு…, ஆவி பறக்கும் டீக்கடை…., ரஜினி முருகன்…கன் …கன்,” ஆகிய பாடல்கள் இசை ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இப்போது படத்தின் பாடல்களும் யு டியூபில் வெளிவர ஆரம்பித்துள்ளன…இன்று காலை வெளியிடப்பட்ட ‘ரஜினி முருகன்…கன்..கன்..’ பாடலை ரசிகர்கள் அதிகமாகப் பார்த்து வருகின்றனர்.
பட வெளியீட்டிற்குப் பிறகும் ‘ரஜினி முருகன்’ பாடல்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்து விடும்.