நான் ‘சிங்கிளா’, யார் சொன்னது ? – சமந்தா கேள்வி

ஒரு மாத இடைவெளிக்குள் இரண்டு பெரிய படங்கள் வெளிவந்ததால் தினமும் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார் சமந்தா.

‘24’ படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் தெலுங்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார் சமந்தா. (தமிழ்ப் பத்திரிகையாளர்களை மட்டும் சந்திக்க மாட்டார்.)

அப்போது பேசிய அவர்,

“தொடர்ந்து 8 மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். தினமும் 12 மணி நேரம் வரை நடித்திருக்கிறேன். சில சமயங்களில் தனியாக இருக்கும் போது தனிமையில் காருக்குள்ளேயே அழுதிருக்கிறேன்.

என்னுடைய படம் வெளிவரும் போது இரண்டு நாட்களுக்கு எனக்கு தூக்கம் கூட வராது.

‘24’ படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமே. படத்தில் சூர்யாவுக்கும், இயக்குனர் விக்ரம் குமாருக்கும்தான் பெயர் கிடைக்கும் என்பது தெரியும். இருந்தாலும் இது போன்ற மாஸ் படத்தில் இருப்பது பெரிய விஷயம். எனக்கென்று இந்தப் படத்தில் தனி இடம் இருந்தது.

அடுத்து பத்திரிகையாளர்கள் நீங்கள் ‘சிங்கிள்’ ஆக இருப்பது சந்தோஷமா என்று கேட்டதற்கு,

“யார் சொன்னது, நான் சிங்கிள் ஆக இருக்கிறேன்,” என்று கேட்டுவிட்டு, அதற்கு மேல் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சில தினங்களுக்கு முன்புதான் “நல்ல ‘கேர்ள் பிரண்ட்’ ஆகவும் இருக்க முடியவில்லை,” என சமந்தா டிவீட்டியிருந்தார். அதற்கடுத்த சில நாட்களிலேயே அவர் இப்படி பதிலளித்திருப்பதன் மூலம் சமந்தா சமீபத்தில்தான் யாருடனோ காதலில் விபந்திருக்கிறார் என்று தெரிகிறது.

Read Previous

இதுக்கு கூடவா சண்டை போடுவீங்க…!!

Read Next

Vijay clears the air

Most Popular