இதுக்கு கூடவா சண்டை போடுவீங்க…!!

தமிழ்த் திரையுலகில்தான் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக சண்டை நடந்து வருகிறது.

ஒருவர் படம் வெளிவந்தால் மற்றவரின் ரசிகர்கள் அதைப் பற்றி கீழ்த்தரமாக எழுதி, அந்தப் படத்தை ஓட விடாமல் சதி செய்யும் வேலைகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சண்டை தற்போது தெலுங்குத் திரையுலகிலும் ஆரம்பமாகிவிட்டதைப் பார்த்து பலரும் நொந்து போயிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் ஒரு வாரத்திற்கு முன்னதாக டிவிட்டரில் ஒரு புதிய கணக்கைத் துவக்கினார்.

அதன் பின் காஜல் அகர்வால் யார் யாரைத் தொடர்கிறார் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

அந்தப் பட்டியலில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, ஜுனியர் என்டிஆர், ஏன் நேற்று வந்த அகில் நாகார்ஜுனா ஆகியோர் இருந்தார்கள்.

ஆனால், பவன் கல்யாண் அந்தப் பட்டியலில் இல்லை. அவ்வளவுதான் அவருடைய ரசிகர்கள் காஜல் அகர்வாலை சமூக வலைத்தளங்களில் கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் சமீபத்தில்தான் பவன் கல்யாணுடன் காஜல் இணைந்து நடித்த ‘சர்தார் கப்பார் சிங்’ படம் வெளிவந்தது.

பவன் ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும், அதைக் கண்டு கொள்ளாத காஜல் அகர்வால் இன்னும் பவன் கல்யாணை ஏன் தொடரவில்லை என்பதுதான் முக்கியமான கேள்வி.

Read Previous

தமிழுக்கு வரும் அல்லு அர்ஜுன்

Read Next

நான் ‘சிங்கிளா’, யார் சொன்னது ? – சமந்தா கேள்வி

Most Popular