டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் மற்றும் பலர் நடித்துள்ள ‘காஷ்மோரா’ படம் வித்தியாசமான படம் என்ற பெயரைப் பெற்ற வருகிறது.
இந்தப் படத்தைப் பார்த்து ரசித்த கார்த்தியின் அண்ணன் சூர்யா, “தம்பி..டேய்..கலக்கிட்டே…’ என பாராட்டு தெரிவித்துள்ளார்.
“பருத்தி வீரன்’ படத்தைப் பார்த்த போது நான் அவனைக் கட்டிப் பிடித்தேன். ஆனால், இப்போது பிரமிப்பில் சில அடிகள் தள்ளியே நிற்கிறேன். தம்பி, டேய்…கலக்கிட்டே…‘காஷ்மோரா’வில் உன்னுடைய வேலை என் மனதில் வெடித்தது.
நான் இப்படி வரும் என்று பார்க்கவில்லை, அவனும் மிகவும் கடினமாக உழைத்த, இந்த அற்புதமான படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை.
கார்த்தி, நீ என்னை ஆச்சரியங்களால் என்னை கொண்டு சென்றுவிட்டாய். இனி, நான் புதிய குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும்.
கோகுல் மற்றும் குழுவினர், நீங்கள் தமிழ் சினிமா இதுவரை காணாத எல்லைகளைக் கடந்துவிட்டீர்கள்.
நடித்திருப்பவர்கள், அவர்களின் நகைச்சுவை டைமிங், ஒளிப்பதிவு, கலை அமைப்பு, உடைகள், வசனம், கிராபிக்ஸ் பணி ஆகியவை ஒவ்வெரு காட்சியிலும் ஒளிர்கிறது.
விஎஃப்எக்ஸ் முதன்மையாக உள்ள படங்களில் நடிப்பது கடினமான விஷயம். நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை கற்பனை செய்து கொண்டு நடிக்க வேண்டும். ஆனால், ராஜ்நாயக், ரத்தினமகாதேவி ஒவ்வொரு காட்சியிலும் ஒளியேற்றி, ஆட்சி செய்கிறார்கள்.
இப்படி ஒரு தலை சிறந்த படத்தைக் கொடுத்த டிரீம் வாரியர் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இது ஒரு முழுமையான பெரிய திரையில் பார்க்க வேண்டிய படைப்பு, அதனால் தியேட்டர்களில் மட்டும் பாருங்கள்,” என ‘காஷ்மோரா’ பற்றி மனம் திறந்து பாராட்டியுள்ளார் சூர்யா.