கமல்ஹாசன் வெளியிடும் ‘எஸ் 3’ இசை மற்றும் டீசர்

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கும் ‘எஸ் 3’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு வரும் நவம்பர் மாதம் 7ம் தேதியன்று நடைபெற உள்ளது.

சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள விழாவில் கமல்ஹாசன் ‘எஸ் 3’ படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிட உள்ளார். அன்றைய தினம் கமல்ஹாசனின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ‘எஸ் 3’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ‘எஸ் 3’ படத்தின் மோஷன் போஸ்டர் யு டியூபில் வெளியிடப்பட்டது. அதை இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான ‘சிங்கம், சிங்கம் 2’ ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது அதே கூட்டணியில் மீண்டும் உருவாகி வரும் ‘எஸ் 3’ படத்திற்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read Previous

தம்பி…டேய்…கலக்கிட்டே… – கார்த்திக்கு சூர்யா பாராட்டு

Read Next

மகள்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி, கமல்

Most Popular