‘கொடி’ – 3 நாளில் 22 கோடி வசூல் ?

தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள ‘கொடி’ படம் தீபாவளிக்கு முதல் நாள் 28ம் தேதி வெளியானது.

தமிழ்நாட்டில் சுமார் 400 தியேட்டர்களில் வெளியான இப்படத்திற்கு நல்லதொரு முன்பதிவு இருந்தது.

முதல் நாளில் சுமார் 6.5 கோடி வரை வசூலித்த இந்தப் படம் மறுநாள் தீபாவளியன்று சுமார் 7.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. நேற்று 8 கோடி ரூபாயாக இப்படத்தின் வசூல் உயர்ந்துள்ளது.

மூன்று நாட்களில் சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதால் இந்தப் படம் படத்தை வாங்கியவர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும் என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷின் முந்தைய படங்களான ‘தொடரி, தங்கமகன்’ ஆகிய படங்களை விட ‘கொடி’ வசூல் திருப்திகரமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள்.

Read Previous

எப்போது நான் சூப்பர் ஸ்டார், சிம்பு தரும் விளக்கம்

Read Next

தம்பி…டேய்…கலக்கிட்டே… – கார்த்திக்கு சூர்யா பாராட்டு

Most Popular