சிம்பு என்றாலே சர்ச்சை என்ற அளவுக்கு சமீப காலத்தில் பல விஷயங்கள் நடந்து வருகின்றன. ‘பீப் பாடல்’ பிரச்சனைக்குப் பிறகு இதுவரை மீடியாவைச் சந்தித்து சிம்பு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவர் நடித்து அதன் பின் எந்த படமும் வெளிவரவில்லை.
நீ….ண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியான ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சியில் தத்துவ மழையாக தன்னுடைய பதிலைப் பொழிந்தார் சிம்பு.
தான் எப்போது சூப்பர்ஸ்டார் ஆவேன் என்பதற்கும் அவர் நீண்ட ஒரு விளக்கம் கொடுத்தார்.
‘என்னுடைய ‘எய்ம்’ என்னன்னா, எல்லாரும் தப்பா நினைச்சிட்டிருக்காங்க, சிம்பு, ஏதோ சூப்பர் ஸ்டார் ஆக டிரை பண்றாரு, ஏதோ பெரிய ஆளாக டிரை பண்றாரு, நான் டிரை பண்ணவே இல்லைங்க.
நான் சினிமாவுலயே கிடையாதுன்னு வச்சிக்குங்க. நான் ஓபனா சொல்றன், எனக்கு சினிமா வேணாம், எனக்கு இந்த போட்டி வேணாம், எனக்கு நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா, யாரு வேணா சூப்பர் ஸ்டார் ஆகட்டும், நீங்க யாரை வேணா தலையில வச்சி கொண்டாடுங்க, யாருக்கு வேணா நீங்க கைதட்டுங்க, எனக்கு அதைப் பத்தி கவலை கிடையாது.
நான் சினிமா பண்ற ஒரே காரணம், 3 வருஷம் ஒருத்தன் படம் பண்ணலன்னாலும், நீ வருவடா, உனக்காக நாங்க இருப்பன்டான்னு ஃபேன்ஸ் நின்னாங்க பாருங்க, அது போதும். அதுக்காக மட்டும்தான் இவனுங்களோட குருமாவைலாம் கேட்டுக்கிட்டு சரி பரவாயில்லை, பண்ணுவோம் படம், அப்படின்னு பண்ணிக்கிட்டு இருக்கன். இல்லன்னா எனக்கு சினிமா தேவையே கிடையாது.
ஏன்னா, என்னுடைய டிரீம், என்னுடைய எய்ம், என்னுடைய லைஃப் டைம் அச்சீவ்மென்ட், இந்த உடம்பை விட்டு, இந்த உயிரை ஆண்டவன் எடுக்கறதுக்கு முன்னாடி, நான் ஒரு விஷயம் பண்ணணும் அப்படின்னா, இந்த உலகத்துல எந்த மூலைல வேணாம் ஒரு குழந்தை பொறக்கட்டும். அது சைனாகாரனுக்கு பொறக்கட்டும், அது ஆப்பிரிக்காகாரன் குழந்தையா இருக்கட்டும், அது அமெரிக்காகாரன் குழந்தையா இருக்கட்டும், அது என் தமிழினத்தைக் கொன்ன ஸ்ரீலங்கனோட குழந்தையா கூட இருக்கட்டும். எனக்கு அதப் பத்தி கவலை கிடையாது.
அன்னிக்கு அந்த குழந்தை பொறக்கும் போது, அந்தக் குழந்தைக்கு அன்னைக்கு சோறு கிடைக்கும், எஜுகேஷன் கிடைக்கும், தங்கறதுக்கு ஒரு இடம் கிடைக்கும், உடம்பு சரியில்லன்னா டிரீட் பண்ண ஆஸ்பிட்டல் கிடைக்கும். அந்த குழந்தை சந்தோஷமா, நிம்மதியா எந்த டென்ஷனும் இல்லாம அதுக்கு புரொடக்ஷன் கிடைக்கும்.
இந்த 5 விஷயமும் உலகத்துல எல்லா குழந்தைக்கும் நடக்கறதுக்கு சிலம்பரசன் ஒருநாள் காரணமா இருக்கான் அப்படின்னு சொன்னா, அன்னைக்குதாங்க நான் சூப்பர்ஸ்டார், அதுவரைக்கும் நான் சூப்பர்ஸ்டார் கிடையாது,” என்றார் சிம்பு.