தமிழ்நாட்டு இளைஞர்கள், மக்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அண்டை மாநில நடிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியாரும், மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த மம்முட்டியும் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் ‘பிரேமம்’ படப் புகழ் நிவின் பாலி சற்று முன்னர் டிவிட்டரில் தனது ஆதரவைப் பதிவு செய்துள்ளார்.
“ஒற்றுமையே வலிமை, பிரிந்தால் வீழ்ந்து விடுவோம். சென்னை, மெரீனாவிலிருந்து வரும் புகைப்படங்கள் ஆய்த எழுத்து படத்தை ஞாபகப்படுத்துகின்றன.
கூட்டத்தினர் ஒற்றுமை, ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடிக்கும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த விவகாரம் சீக்கிரமே இணக்கமாக முடிவடையட்டும்.
கலாச்சாரத்தை கடைபிடிப்போம், பாரம்பரியத்தை காப்போம்,” என பதிவிட்டுள்ளார்.