‘சி 3’ படம் வெளிவருவது தள்ளிப் போனதுமே ‘போகன்’ படத்தை வெளியிட முடிவு செய்து இன்று படத்தை வெளியிட்டுவிட்டார்கள்.
இப்படி ஒரு படம் இன்று வெளிவந்துள்ளதா என்றே பலருக்கும் தெரியாத நிலையில் படத்திற்கான முன் பதிவு படக் குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
சென்னையில் குறிப்பிடத்தக்க தியேட்டர்களில் படம் வெளியாகியிருந்தாலும் இன்று ஒரு தியேட்டரில் கூட அரங்கம் நிறைந்த காட்சிகள் நடைபெறவில்லை என்கிறது தியேட்டர் வட்டாரங்கள்.
ஆன்லைனில் சென்று பார்த்தால் வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அப்படியே இருக்கிறது.
படத்தைப் பார்த்து விட்டு வந்தவர்களும் இந்தப் படத்திற்கு எப்படி ‘யு’ சர்டிபிகேட் கொடுத்தார்கள், ‘ஏ’ சர்டிபிகேட் அல்லவா கொடுத்திருக்க வேண்டும், குழந்தைகளுடன் சென்று படத்தைப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது என்று புலம்பியபடியே செல்கிறார்களாம்.