லைக்கா புரொடக்ஷன்ஸ், இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது.
2006ம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் தயாராகிறது.
பொதுவாக அந்தக் கால மன்னர்களைப் பற்றி வரலாற்றில் குறிப்பிடும்போது முதலாம், இரண்டாம், மூன்றாம் மன்னன் என்றே வரிசைப்படுததி குறிப்பிடுவார்கள்.
அதனால்தான் இந்த இரண்டாம் பாகத்தையும் 23வது புலிகேசிக்கு அடுத்து 24ம் புலிகேசி என்று குறிப்பிடும் வகையில் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
கடந்த 11 வருடங்களில் டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்டது. அதனால் இந்த 24ம் புலிகேசியை, 23ம் புலிகேசியை விட மிகவும் அசத்தலாக உருவாக்க இருக்கிறார்களாம்.
இப்படத்திற்காக தனியார் ஸ்டுடியோ ஒன்றில் மிகப் பிரம்மாண்டமான அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பா. விஜய், கபிலன் பாடல்களை எழுதுகிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்ய, விகேக் ஹர்ஷன் படத் தொகுப்பு செய்கிறார்.
படத்தின் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.