இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

தமிழில் விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ், காவலன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சித்திக், மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார்.

அரவிந்த் சாமி, அமலா பால் நாயகன், நாயகியாக நடிக்க நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

தற்போது சென்னையில் இறுதிக்கட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மாலத் தீவிற்கு வரும் 27ம் தேதி செல்ல இருக்கிறார்கள். அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தில் விஜய் சேதுபதி

Read Next

‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ – பராக்….பராக்…

Most Popular