‘கைதி நம்பர் 150’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம் ‘சை ரா – நரசிம்மரெட்டி’.
சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இதன் மூலம் தெலுங்குத் திரையுலகிலும் விஜய் சேதுபதி அறிமுகமாகிறார்.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளதால் ஒவ்வொரு மொழியிலிருந்தும் பிரபல நடிகர்களை நடிக்க வைக்கிறார்கள்.
அதன்படி, ஹிந்தியிலிருந்து அமிதாப்பச்சன், கன்னடத்திலிருந்து சுதீப், தமிழிலிருந்து விஜய் சேதுபதி ஆகியோர் படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முக்கியக் கலைஞர்கள் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஒளிப்பதிவை ரவிவர்மன், கலையை ராஜீவன் ஆகியோர் செய்கிறார்கள்.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.