‘அயோக்யா’ கருத்து விளம்பர யுத்தி – பார்த்திபன்

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘அயோக்யா’.

இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் 1993ம் ஆண்டில் பார்த்திபன் இயக்கம் நடிப்பில் வெளிவந்த ‘உள்ளே வெளியே’ படத்தின் கதை போல இருப்பதாகச் சொன்னார்கள். சில விமர்சனங்களும் அப்படியே குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை இது பற்றி பார்த்திபன் குற்றச்சாட்டுப் பதிவு போல ஒன்று போட்டிருந்தார்.

அதன் பிறகு அவரது டுவிட்டர் பதிவு பரபரப்பான செய்தியானது. சற்று முன்னர் காலையில் தான் பதிவிட்டது படத்திற்கான ஒரு விளம்பர யுத்தி எனக் குழப்பும் விதத்தில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

படக்குழுவிலிருந்து யாராவதோ அல்லது நடிகர் விஷாலே பார்த்திபனின் காப்பி பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள், அதனால்தான் சமாளிப்பதற்காக பார்த்திபன் இப்போது இப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறார் என்று அதில் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

‘அயோக்யா’ படம் தெலுங்கில் வெளிவந்த ‘டெம்பர்’ படத்தின் ரீமேக். ‘டெம்பர்’ படத்தை தன் ‘உள்ளே வெளியே’ படத்திலிருந்து காப்பி அடித்து எடுத்திருக்கிறார்கள் என்று காலையில் பதிவிட்டார் பார்த்திபன்.

அவரே ஆரம்பித்த ஒரு பிரச்சினையை அவரே முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

Read Previous

‘பிக் பாஸ் 3’ – போட்டியாளர் தேர்வு தீவிரம்

Read Next

கீ – விமர்சனம்