‘பிக் பாஸ் 3’ – போட்டியாளர் தேர்வு தீவிரம்

2017ம் ஆண்டு விஜய் டிவியில் முதன் முதலில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உடனடியாக சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக மாறியது.

அதற்கு தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஒரு காரணம் என்றாலும், பரபரப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் நடிகை ஓவியா தான்.

ஓவியாவின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஓவியா ஆர்மி என்றெல்லாம் ரசிகர்கள் உருவாகினர்.

கடந்த வருடம் 2018ம் ஆண்டு ‘பிக் பாஸ்’ சீசன் 2 ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இருந்தாலும் முதல் சீசனைப் போல இரண்டாவது சீசன் இல்லை என்ற கருத்துதான் அதிகமாக இருந்தது.

மூன்றாவது சீசன் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. அதற்காக இப்போதே போட்டியாளர்களின் தேர்வை தீவிரமாக ஆரம்பித்துவிட்டனர். கடந்த சில நாட்களாக சில நடிகர்கள், நடிகைகளின் பெயர்கள் செய்திகளில் அடிபட ஆரம்பித்துள்ளன. ஆனால், இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

எப்படியும் மூன்றாவது சீசன் ஒளிபரப்பு ஆரம்பமாவதற்குள் போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரிய வந்துவிடும்.

Read Previous

‘தேவர் மகன் 2’-வில் நடிக்கப் போகும் கமல்ஹாசன்

Read Next

‘அயோக்யா’ கருத்து விளம்பர யுத்தி – பார்த்திபன்

Most Popular