தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மெர்சல்’.
இப்படத்தின் விடுபட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆரம்பித்துவிட்டார்.
வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவர உள்ள ‘மெர்சல்’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் முந்தைய படங்களைக் காட்டிலும் அதிக பட்ஜெட்டில், பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
‘மெர்சல்’ டீசருக்காக விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.