விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அசத்தலான நகைச்சுவை நிகழ்ச்சி ‘கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்’.
சுட்டிக் குழந்தைகள் அவர்களது மழலைப் பேச்சில் நகைச்சுவையுடன் நம்மை சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
நடிகை ரம்பா, ரோபோ சங்கர், ஆர்ஜே சிந்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கிறார்கள்.
பல்வேறு சுற்றுகள் கடந்து இறுதிச் சுற்றில் போட்டியிட சிறந்த டாப் திறமைசாலிகளான சுசில், மிருதுளா ஸ்ரீ , ஹ்ரித்திக் ஹாசன் , ஆதேஷ், உத்ரா மற்றும் முகேஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இந்த பிரமாண்டமான இறுதிச் சுற்றில் , போட்டியாளர்கள் இரண்டு சுற்றிற்கு தனியாகவும், ஜோடியாகவும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
பல உற்சாகமான நிகழ்வுகள் நடந்துள்ள இறுதிப் போட்டியில் நடுவர்களும் அவர்களது நகைச்சுவைத் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
தமிழ்த் திரையுலகின் பல நகைச்சுவை நடிகர்களும் இந்த இறுதிப் போட்டி நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
இறுதிச் சுற்று நிகழ்ச்சி நாளை செப்டம்பர் 17ம் தேதி ஞாயிறு மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.