விஜய் டிவியில் தொகுப்பாளராக பிரபலமான மாகாபா ஆனந்த் தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் ‘மாணிக்’.
‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் நாயகியாக நடிக்கிறார். இரண்டாம் ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மார்டின் இயக்கிய பல குறும்படங்கள் பல்வேறு விருதுப் போட்டிகளில் பங்கேற்றதுடன், கலைஞர் டிவி-ன் நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியில் வெற்றி பெற்று டைட்டிலையும் வென்றுள்ளது.
மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் தயாரித்துள்ள இப்படம் ஃபேன்டஸி கலந்த காமெடிப் படமாக உருவாகியுள்ளது
பாட்ஷா ரஜினிகாந்த் கெட்டப்பில் இப்படத்தின் டிசைன்கள் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று (செப்.15) இப்படத்தின் முதல் பார்வை டிசைன் மற்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், ‘மாணிக்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று வெளியிட்டார்.
அப்போது படத்தின் ஹீரோ மா.கா.பா.ஆனந்த், இயக்குநர் மார்டின், தயாரிப்பாளர் எம்.சுப்பிரமணியம், ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.பழனிகுமார், எடிட்டர் கே.எம்.ரியாஸ், இணை இயக்குநர் மணி ஆகியோர் உடன் இருந்தார்கள்.
விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.