சற்குணம் இயக்கத்தில், விமல், ஓவியா மற்றும் பலர் நடிக்கும் ‘களவாணி 2’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் அரசியல் அதிரடி வில்லனாக துரை சுதாகர் நடிக்கிறார். தன்னை பப்ளிக் ஸ்டார் என அடையாளப்படுத்திக் கொண்டு வரும் இவர் இந்தப் படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார்.
சிறிய படங்களில் ஹீரேவாக நடித்த துரை சுதாகர் சினிமாவில் நடிகராக நிலைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார். அப்போதுதான் ‘களவாணி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் நடித்த பிறகு அவருக்கு புதிய வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறதாம்.
“வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். திடீரென்று தோன்றி திடீரென்று மறையும் நட்சத்திரமாக இல்லாமல், மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்களின் நட்சத்திரமாக இருப்பதற்காகவே சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்,” என்கிறார் துரை சுதாகர்.
‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு முன்னணி வில்லன் நடிகர்கள் வரிசையில் தானும் நிச்சயம் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.