‘மெர்சல்’ வெற்றிக்கு நன்றி, விஜய் அறிக்கை வெளிப்படுத்துவது என்ன ?

‘மெர்சல்’ படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே 150 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுவரை விஜய் நடித்து வெளிவந்துள்ள படங்களிலேயே இந்தப் படம் அதிக வசூலைப் பெறும் என்றும் சொல்கிறார்கள். கடந்த ஞாயிறு அன்று வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் படம், வரும் வார இறுதி நாட்களிலும் இப்போதே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘மெர்சல்’ படத்தின் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அவருடைய ‘லெட்டர் பேட்’ ஒன்றில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , ‘ஜீசஸ் சேவ்ஸ்’ என்றும், ‘சி. ஜோசப் விஜய்’ என்றும் இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக விஜய் சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் கடந்த சில வருடங்களாக வெறும் வெள்ளை பேப்பரில் மட்டுமே பிரின்ட் செய்யப்பட்டு, ’விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்….’ என்று எழுதப்பட்டு அவருடைய பிஆர்ஓ மூலம் வெளியிடப்படும்.

கடைசியாக 2014ம் ஆண்டில்தான் விஜய் அவருடைய ‘சி. ஜோசப் விஜய்’ என்ற லெட்டர் பேட் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதன் பின் அவர் அந்த லெட்டர் பேடை பயன்படுத்தியதேயில்லை. வெள்ளைக் காகிதம் மட்டுமே அவருடைய அறிக்கையாக கடந்த மூன்று வருடங்களாக வந்த நிலையில் இன்று அந்த பழைய ‘சி. ஜோசப் விஜய்’ என்ற லெட்டர் பேடில் அறிக்கை அவருடைய பிஆர்ஓ மூலம் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘மெர்சல்’ பட சர்ச்சையில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான எச். ராஜா, விஜய்யை டிவிட்டரில் ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டதற்கு பதிலடியாகவே விஜய் தற்போது அந்த பழைய ஜோசப் விஜய் லெட்டர் பேடை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

2014ம் ஆண்டு விஜய் வெளியிட்ட ஒரு அறிக்கை…

Read Previous

ஐ.வி.சசி ஒரு கலைக் கருவூலம் – வைரமுத்து

Read Next

டிசம்பரில் ‘வணங்காமுடி’ படப்பிடிப்பு நிறைவு

Most Popular