செல்வா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் அரவிந்த்சாமி, ரித்திகா, நந்திதா ஸ்வேதா, சாந்தினி, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வணங்காமுடி’.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, துறைமுகப் பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. துறைமுகத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பாடல் காட்சியின் படப்பிடிப்பும் நடைபெற்றது.
கொடைக்கானலில் நவம்பர் இரண்டாவது வாரம் முதல் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அங்கு சேசிங் காட்சியும், பாடல் காட்சியும் படமாக உள்ளன. அதற்கடுத்து சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐந்து நாள் படப்பிடிப்புடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.
படத்தின் முதல் பார்வை, டீசர், டிரைலர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.