என்டிஆர் தேசிய விருது, ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அம்மாநில அரசு திரைப்படத் துறையினருக்காக வழங்கும் விருதுகள், நந்தி விருதுகள் என அழைக்கப்படுகின்றன.

அந்த விருதை வாங்குவதை தெலுங்குத் திரையுலகினர் ஒரு கௌரவமாகவே நினைக்கிறார்கள்.

கடந்த மூன்று வருடங்களுக்கான திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதே போல திரையுலகில் சாதனை படைத்த சில பிரமுகர்களுக்கும் “என்டிஆர் தேசிய விருது, பி.என்.ரெட்டி மாநில விருது, நாகிரெட்டி – சப்ராணி மாநில விருது, ரகுபதி வெங்கையா மாநில விருது, சிறப்பு நடுவர் விருது” ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 2014ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது நடிகர் கமல்ஹாசனுக்கும், 2016ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது நடிகர் ரஜினிகாந்துக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் இந்த விருதைப் பெறுவது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், ஆந்திர மாநில அரசுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Read Previous

‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் திடீர் அறிக்கை ஏன் ?

Read Next

ஆந்திர அரசுக்கும், வாழ்த்திய கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்த் நன்றி

Most Popular