‘கலிங்கா’ படத்தைத் தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் ‘பற’.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் ‘பச்சை என்கிற காத்து’, விரைவில் வெளிவர இருககும் ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்கின்றனர்.
முதல் நாள் படப்பிடிப்பில் டைரக்டர் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டு படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
‘பற’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்கம்; கீரா
ஔிப்பதிவு; சிபின் சிவன்
இசை; ஜார்ஜ் வி.ஜாய்
பாடல்கள்; உமா தேவி, சினேகன்
எடிட்டிங்; சாபு ஜோசப்
கலை; மகேஷ்
தயாரிப்பு மேற்பார்வை; சிவசங்கர்
இணை தயாரிப்பு; s.p.முகிலன்
தயாரிப்பு; பெவின்ஸ் பால், ரிஷி கணேஷ்