ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’.
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
அம்ரீஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான்.
இப்படத்தின் தெலுங்கு உரிமையை என்கேஆர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்களாம். ஒரு முழுமையான பேய்ப் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.
தெலுங்கில் சென்சார் ஆன உடனே ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் படத்தை வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.