பிரபாஸுக்கு நாயகியாகும் மிருணாள் தாகூர்

பிரபாஸுக்கு நாயகியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தமாகியுள்ளார்.

’சீதா ராமம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஹனு ரவிப்புடி இயக்கவுள்ள படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்தப் படத்தின் பாணியிலேயே மீண்டும் ஒரு ராணுவப் பின்னணியில் கதையொன்றை உருவாக்கியுள்ளார் ஹனு ரவிப்புடி.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் ஒப்பந்தமாக முடிவாகவில்லை. ஆனால், நாயகனாக பிரபாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பினைத் தொடங்கவுள்ளனர்.

இதில் நாயகியாக நடிக்க மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘சீதா ராமம்’ படத்திலும் அவரே நாயகியாக நடித்திருந்தது நினைவுக் கூரத்தக்கது. மீண்டும் வெற்றிக் கூட்டணி இணைந்துள்ளது.

தற்போது ’கல்கி 2898’ என்னும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து இதில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.

Read Previous

ஜெயமோகனை சாடியுள்ள ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் தந்தை

Read Next

இந்திப் படத்தினை உறுதிச் செய்த பா.ரஞ்சித்