சர்ச்சை செய்ய வேண்டும் என நினைத்தால் எதில் வேண்டுமானாலும் சர்ச்சையை உருவாக்கலாம். அது பார்ப்பவர்களின் பார்வையில்தான் உள்ளது.
விஜய் ரசிகர் ஒருவர் இந்த ஊரடங்கு காலத்தில் ‘மாஸ்டர்’ கலைஞர்கள் ஒரு வீட்டிற்குள் ஊரடங்கில் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை ஓவியம் ஒன்றை வரைந்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதைப் பலரும் ரசித்தார்கள்.
ஆனால், படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் அந்த ஓவியத்திற்கு தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
“ஒரு கற்பனையான ஓவியத்தில் கூட ஒரு பெண்ணிற்கு சமையல் செய்வதைத்தான் வேலையாகக் கொடுப்பீர்களா ?. இந்த பாலினம் சார்ந்த வேறுபாடு எப்போது ஒழியும், ச்சை,” என கமெண்ட் செய்தார். அதற்காக அவருக்கு அதிகமான எதிர்ப்புகள் வந்ததையடுத்து தன் கருத்தை நீக்கிவிட்டார் மாளவிகா.
அது குறித்து சில சினிமா பிரபலங்கள் அவர்களது கருத்தைப் பதிவு செய்து அதை ஒரு சர்ச்சை ஆக்கினார்கள்.
இந்நிலையில் அந்த ஓவியத்தை வேறு ஒரு விஜய் ரசிகர், அதில் மாளவிகா மோகனன் புத்தகம் படிப்பது போல மாற்றினார்.
திருத்தப்பட்ட ஓவியத்தைப் பார்த்து ரிடிவீட் செய்துள்ள, மாளவிகா மோகனன் எனக்கு புத்தகம் படிப்பது பிடிக்கும் என்பது எப்படி உங்களுக்குத் தெரியும் என அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
எப்படியெல்லாம் புதுசு, புதுசாக சர்ச்சையை உருவாக்குகிறார்கள். நல்ல வேளையாக அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.