அஜித் வேண்டாமென்று சொல்லியும் 50 லட்சம் டிவீட்டுகள்

நடிகர் அஜித் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி வர உள்ளது. அதற்கான கொண்டாட்டங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள்.

கொரானோ ஊரடங்கு சமயத்தில் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாமென தனது அலலுவலகம் மூலம் அஜித் தெரிவித்துவிட்டார்.

இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அதையெல்லாம் கேட்பதாக இல்லை. #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி 25 மணி நேரத்தில் 50 லட்சம் டிவீட்டுகளை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்பு #PawanakalyanBirthdayCDP  என்ற ஹேஷ்டேக்கிற்கு 22 லட்சம் டிவீட்டுகளும், #SuperstarMaheshBdayCDP என்ற ஹேஷ்டேக்கிற்கு 20 லட்சம் டிவீட்டுகளும் பதிவிட்டதே சாதனையாக இருந்தது.

அதைவிட இரண்டு மடங்கு சாதனைகளைப் படைத்துள்ளார்கள் அஜித் ரசிகர்கள்.

Read Previous

பொன்மகள் வந்தாள் – 30 தயாரிப்பாளர்கள் ஆதரவு அறிக்கை

Read Next

மாஸ்டர் ஓவியம் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்கள்